பேட்மிண்டன் விளையாடிய இந்திய குடியரசுத் தலைவர்!

11.07.2024 07:55:50

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,(Droupadi Murmu) பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன்(Badminton) மைதானத்திலேயே இருவரும் பேட்மிண்டன் விளையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான புகைப்படங்களை  ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் குறித்த புகைப்படங்களுக்கு  வரவேற்புத்  தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது