ஐ.பி.எல் 2024: ராஜஸ்தான்–மும்பை அணிகள் இன்று பலப் பரீட்சை

23.04.2024 07:39:28

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் IPL 2024 தொடரின் இன்றைய நாளுக்கான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

 

இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னாள் சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இதேவேளை 5 முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியைத் தழுவிய போதும் அடுத்த 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று மீண்டு வருகின்றது.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.