அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. குறிப்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என ஏற்கனவே அறிவித்துவிட்டது. துவக்கத்தில் அமித்ஷா தலைமையில்தான் கூட்டணி என்கிற இமேஜ் உருவானது.
ஆனால், என்னுடைய தலைமையில்தான் கூட்டணி. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது. சமீபத்தில் அவை என்னென்ன தொகுதிகள் என்கிற லிஸ்ட்டை அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்திருக்கிறாராம். ஏனெனில், அதிமுக கொடுக்கும் பலவீனமான தொகுதிகள் தங்களுக்கு வேண்டாம் என அமித்ஷா நினைக்கிறாராம்.
அதில், பல தொகுதிகள் திமுக வசமிடமும், அதன் கூட்டணி கட்சி வசமும் இருக்கிறது. அதிமுக வசம் 5 தொகுதிகள் இருக்கிறது. அதில், 4 தொகுதிகளில் பாஜக ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதிகள் எனத்தெரிகிறது. உண்மையில் பாஜகவுக்கு 50 தொகுதிகள் கொடுக்க பழனிச்சாமிக்கு விருப்பமில்லை என்கிறார்கள். 40 தொகுதிகள் கொடுக்கலாம் என அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது.