இன்று அ.தி.மு.க. வின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் !

08.03.2021 08:56:30

அ.தி.மு.க. வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்  இன்று (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில்,  இம்மாதம் 5ம் திகதி  முதல் கட்டமாக ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளுக்கு  வேட்பாளர்களை கட்சி தலைமை இறுதி செய்துள்ளது.

எனவே அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க,  பா.ஜ.க,  தே.மு.தி.க,  த.மா.கா, போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில்  பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.