இன்று மாலைதமிழக சட்டப்பேரவை தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்
26.02.2021 10:14:33
தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இன்று மாலை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிடவுள்ளார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவடைகின்றது.
இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையகம் கலந்தாய்வு நடத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா, ஆணையாளர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
இதன்போது 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கால அட்டவணையை அவர்கள் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.