மேலும் தமிழக ஊரடங்கில் தளர்வுகள்
16.07.2021 10:46:40
தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளார்.
இதன்போது தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.