இன்று அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டமும்...

05.03.2021 07:48:48

 

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதன்போது தமிழக சட்டசபை தேர்தலில் அ.திமு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக  நேற்று ஒரே நாளில் விருப்பமனு தாக்கல் செய்த 8 ஆயிரத்து 200 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.