ஐசிஎம்ஆர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கருத்து !

23.06.2021 12:56:28

 

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 82 வீதம் உயிரிழப்புகளையும் இரண்டாவது டோஸ் 95 வீதம் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இறப்புகளை தடுப்பத்தில் கொரோனா தடுப்பூசி செயல்திறன் என்ற ஆய்வின் முடிவுகள்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் தமிழ்நாட்டு காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூ போடுவதை ஆவணப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.