89வது பிறந்தநாள்- டாக்டர் ராமதாசுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

25.07.2021 12:01:04

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டாக்டர் ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 83-வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டாக்டர் ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் டாக்டர் ராமதாசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் ‘‘உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.