தேர்தல் அறிக்கை குறித்த தி.மு.கவின் தகவல் வெளியீடு !
திமுக. வின் தேர்தல் அறிக்கை எதிர்வரும் மார்ச் 11-ம் திகதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களால் மக்களுக்காவே உருவான திமுக.வின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். மக்களின் குறைகளை தீர்க்கவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்ததும் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளன. இந்நிலையில் திமுக.வின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் திகதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.