தேனியில் ஆதரவு திரட்டும் மு.க.ஸ்டாலின்!

10.04.2024 07:19:17

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார்.

 

அந்தவகையில்  தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் விதமாக  மு.க.ஸ்டாலின் இன்று  தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் வீதியில்  நடைபயணம்  மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.