கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை

14.07.2024 09:28:58

கூட்டணி என்பது தனது கோட்பாட்டில் இல்லை எனவும், திராவிடக் கட்சிகளுடன் தன்னால் ஒருபோதும் கூட்டணி அமைக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொிவித்துள்ளாா்.

திராவிடக் கட்சிகளுடன் ஒருவேளை கூட்டணி அமைந்தால், அது மாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும் என்றும் சென்னையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்துள்ளாா்.

 அத்துடன், நாகரிக அரசியல் தெரியாத திமுக, இழிவாகப் பேசுவதற்கு என்றே பேச்சாளர்களை வைத்திருந்ததாகவும், தற்போது நாம் தமிழர் கட்சியினா் சாதி அடிப்படையில் கருத்துக் கூறிவருவதாகக் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளாா்.

 

அத்துடன், குடிப்பெருமை பேசுவதாக தன்னை விமா்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன், திமுகவிடம் இருந்து ஒரு பொது தொகுதியைக்கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றாா்.

ஆனால்  16 பொதுத் தொகுதியில் தனித்துப்போட்டியிட்ட தன்னை சாதிப்பெருமை பேசுவதாகக் விமா்சிக்கின்றாா் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.