மேலும் 6 தடுப்பூசிகள் விரைவில் வருகின்றன.

14.03.2021 08:24:52

இந்தியாவில் மேலும் 6 தடுப்பூசிகள் வரவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேசிய சுற்றுச்சூழல் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பசுமை வளாகத்தை அவர் தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியா உருவாக்கி உள்ள 2 தடுப்பூசிகள் 71 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்து வருவது வேதனையை அளிப்பதாக கூறிய ஹர்ஷவர்தன், கொரோனா பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.