காஷ்மீரின் சில பகுதிகளில் நிலநடுக்கம் !!!
07.03.2021 08:23:57
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, 4.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் -தோடா எனும் இடத்திலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் குறித்து எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.
அதேபோன்று லடாக்கிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.57 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.