மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை விஜயம் இரத்து
13.03.2021 07:47:58
சென்னைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவிருந்தது.
அத்தோடு, பா.ஜ.க. பிரசார வாகனங்களையும் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.