மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது

29.03.2021 09:59:25

 

மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ தமிழக உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், மதசார்பற்ற கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசுடன் மாநில அரசு ஒத்துபோக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசுக்கு மாநில அரசு அடிமையாக இருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

விமானபோக்குவரத்தும் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை என்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், இதற்காக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.