13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது சத்தியலிங்கம் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய மக்களுக்கு இந்த மாதம் முக்கியமான மாதமாக இருக்கின்றது. தங்களின் நம்பிக்கையில் உறுதியாக நின்று, உயிரைத் துச்சமாக மதித்து, உயரிய நோக்கத்திற்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வாரமாக இது இருக்கின்றது. அவ்வாறு தமது உயிர்களைத் தியாகம் செய்த பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரை நினைத்து ஏங்கித் தவிக்கின்ற அனைவருடனும் இணைந்து, நானும் அவர்களுக்கான கௌரவத்தை இந்தச் சபையில் முன்வைக்கின்றேன்.2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கூறும்போது, சுகாதாரம் என்பது அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமையாக இருக்கின்றது. இலங்கையின் சுகாதாரக் குறிகாட்டி சிறந்த முறையில் இருக்கின்றது; ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதாரத் தேவைகள் வெறுமனே தேசிய சராசரிப் புள்ளிவிபரங்களுக்குள் மறைக்கப்படக் கூடாது. கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சமமானதும் தரமானதுமான சுகாதார சேவைகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, நீண்டகால யுத்தத்தினால் சமூக, பொருளாதார உட்கட்டமைப்பு ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய விசேட அபிவிருத்தி நிதியாக 1,250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதனை அதிகரித்து ஒதுக்குவதன் மூலம், மாகாண சுகாதார அமைச்சு மிகவும் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பேருதவியாக இருக்கும்.இதேவேளை, புலம்பெயர் உறவுகள் சுகாதார சேவையை மேம்படுத்தப் பல உதவிகளைச் செய்துள்ளனர்; அவர்களின் நிதியையும் நாங்கள் பயன்படுத்த வேண்டும்.அமெரிக்காவில் வசிக்கும் வேலணையைச் சேர்ந்த ஒருவர் அமைப்பொன்றின் ஊடாக 70,000 அமெரிக்க டொலர் நிதியை ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைப்பதற்காக வழங்க இணங்கியுள்ளார். இத்திட்டத்தை முன்னுரிமை வழங்கக்கூடிய திட்டமில்லை என்று கூறி தேசிய திட்டமிடல் திணைக்களம் நிராகரித்துள்ளதாக அறிகின்றோம். இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கவனம் செலுத்தி, அந்தச் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் மிகப்பெரிய தடையாக மனிதவளப் பற்றாக்குறை உள்ளது. நாடளாவிய ரீதியில் 18 வீத வெற்றிடங்கள் காணப்படுகின்றன; இதில் மொத்த வெற்றிடங்களில் 22 வீதம் வடக்கு மாகாணத்திலேயே நிலவுகின்றன. மருந்துக் கலவையாளர்கள், உயிரியல் மருத்துவப் பிரிவு, தாதியர் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரத் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் எனப் பெருமளவிலான வெற்றிடங்கள் உள்ளன. இவ்வாறான சூழலில் மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவைகளை மாகாணங்கள் வழங்குவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.மன்னார் முருங்கன் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள போதிலும், அடிப்படைக் கட்டுமானங்கள் கிடையாது; அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், செட்டிக்குளம் வைத்தியசாலை முழுமையாகச் செயற்பட முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்களுக்கான தங்குமிட வசதி இல்லாமல் இருக்கின்றது; இதனையும் தீர்க்க வேண்டும்.மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய நிர்வாகத்தின் கீழ் எடுப்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. எமது கட்சியின் நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறுகின்றேன்; நாங்கள் இதனைக் கடுமையாக எதிர்ப்பதுடன், இது தொடர்பில் கவலையடைகின்றோம்.இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். ஆகவே, இத்தகைய பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ள மாகாண வைத்தியசாலைகள் சிறப்பாகச் செயற்பட வேண்டுமாயின் அவற்றுக்கான வளங்களை வழங்குங்கள். அவ்வாறு வழங்கி அவற்றைச் சிறப்பாகச் செயற்பட இடமளியுங்கள்; அதைவிடுத்து அந்த அதிகாரங்களைப் பிடுங்கி எடுக்கும் வேலைகளுக்குப் போக வேண்டாம் என்று கோருகின்றோம்.இலங்கையில் முதலாவதாகச் சுகாதார மூலோபாயத் திட்டங்களை உருவாக்கிய மாகாணமாக வடக்கு உள்ளது. நாங்கள் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் 27 புதிய வைத்தியசாலைகளை அமைத்துள்ளோம். முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘வைகறை’ என்ற நிலையத்தை உருவாக்கினோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை நடமாடும் திட்டங்கள் மூலம் பரிசோதித்தோம்; இலவச நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுத்தோம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தினோம். எங்களுடைய ஆலோசனைகள் நல்லவையென்றால் அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். எதிர்க்கட்சியினரை இதில் ஒதுக்கி வைக்காமல் அவர்களின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.