தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.    
கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற இந்த மசோதா மீதான வாக்​கெடுப்​பின் போது, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா தோல்வியடைந்ததது. இந்த சூழலில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்​பர் 3 ஆம் திகதி வரை நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.இதில், மகளிர் இடஒதுக்கீடு அமலாக்​கம் மற்​றும் மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்பான மசோதாக்​கள் தாக்​கல் செய்​யப்​படும் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது. டெல்​லி​யில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடை​பெற்​ற மத்​திய அமைச்​சரவைக் கூட்​டத்தில், அனைத்து மாநிலங்​களுக்​கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்க ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது.இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.பிக்கள் குழு ஆலோசனைக்கு பின்னர், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிக்க உள்ளதாக திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.ஆ.ராசா விளக்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தேசத்திற்கு எது நல்லது, தமிழ்நாட்டிற்கு எது நல்லது என்பதை நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுத்துள்ளோம்.இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில், அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு அதிகமான இடஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டிற்கு தி.மு.க ஆதரவை வழங்குகிறது.நியாயமான தொகுதி மறு வரையறை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே சென்று இருப்பதால் திமுக வேறு நிலைப்பாட்டை எடுத்து இருப்பதாக தவறாக சித்தரிப்பது கேவலமான செயல்.7.18% என்பதற்கு பதிலாக 7.21 என்ற சதவீதத்தில் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.