உலக அளவில் 47,50,391 பேர் பலி

25.09.2021 12:15:31

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.50 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 47,50,391 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 23,18,53,266 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,84,44,779 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 95,452 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.