தாக்குதலின் காட்சிகள் ஆடைகளில்

15.07.2024 09:28:39

பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் துப்பாக்கி சூடு தாக்குதலுக்குள்ளாகி , காதில் காயம் ஏற்பட்டு , ரத்தம் வழிந்து, பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட நிலையில் , முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஒரு கையை உயர்த்திய புகைப்படம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானது.

அந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ஆடைகள் (டி-சர்ட் ) தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

“இப்போது நான் பலமாக இருக்கிறேன்”,  “நான் தோட்டாக்களுக்கு அஞ்சமாட்டேன்”,  “தோல்வியை ஏற்க மாட்டேன்” என டிரம்பின் சில வார்த்தைகளும் குறித்த ஆடைகளில் அச்சிடப்பட்டுள்ளது .

குறித்த ஆடைகள் சீன நிறுவனமொன்றால் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .