தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?

31.08.2026 14:05:44

பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து இப்போதே ஊடகங்களில் விவாதங்கள் துவங்கிவிட்டன.

இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

மேக்ரான் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டதால், பிரான்ஸ் சட்டப்படி இனி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.

ஆக, அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த விவாதங்களை ஊடகங்களும், பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகளும் துவங்கிவிட்டன.

இந்நிலையில், National Rally கட்சியின் தலைவரான மரீன் லெ பென்னுக்கு (Marine Le Pen) அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரை, அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி என்ற கருத்தே நிலவுகிறது. 10 ஆண்டுகள் பிரான்சை ஆண்டும், அவர் சராசரி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.

மாறாக, மரீன் லெ பென்னோ, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்ய இருப்பதாகவும், அர்சு அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாகவும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சிலிருந்து நாடுகடத்த உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளித்துவருகிறார்.

ஆக, மரீன் லெ பென்னின் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், மேக்ரானுக்கு மாற்றாக அவருக்கு வாக்களிக்க மக்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.

அடுத்ததாக, ஜான் லூக் மெலன்ஷான் (Jean-Luc Mélenchon) என்பவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஜான், ஏழைகளுக்கு வரி குறைப்பு, பணக்கார்களுக்கு அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவுவது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். ஆகவே, அவருக்கும் ஆதரவு நிலவிவருகிறது.

விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. ஆக, அந்த காலகட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்!