பிரதமர் இல்லத்தை மாற்ற விரும்புகிறாரா புதிய பிரதமர்?

29.06.2026 14:06:29

பிரித்தானியாவின் பிரதமராக இருந்த கெய்ர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், பிரித்தானிய அரசியலில், ’Number 10 in the north’ என்னும் ஒரு விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரித்தானிய அரசியலைப் பொருத்தவரை, Number 10 என்பது பிரதமர் இல்லத்தைக் குறிக்கும். அதாவது அது பிரதமர் வாழும் வீடு மட்டுமல்ல, அங்கு, அரசு தொடர்புடைய பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    

 

இந்நிலையில், பிரதமர் இல்லத்தை, அதாவது, பிரதமர் இல்லத்தில் செய்யப்பட்டுவந்த பல விடயங்களை, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் மான்செஸ்டருக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

அதுதான், Number 10 in the north என அழைக்கப்படுகிறது. இன்னொரு முக்கிய விடயம், அரசு மையமாகக் கொண்டு செயல்படும் வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து அதிகாரத்தை, மேயர்களுக்கு பகிர்ந்தளிக்க ஆன்டி திட்டமிட்டுவருகிறார்.

அவரது திட்டத்துக்கு, எதிர்க்கட்சியில் சில உறுப்பினர்களிடையே கூட ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. ஆன்டி பர்னாம், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.