இஸ்ரேலின் தென்பகுதி இராணுவதளம் சேதம்

14.04.2024 09:20:45

ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள இராணுவதளமொன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தளத்தின் உட்கட்டமைப்பிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி  தெரிவித்துள்ளார்.சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஈரான் செலுத்திய ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேலின் எல்லைக்குள் வைத்து செயல் இழக்கச்செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரோ அமைப்பு முறையை பயன்படுத்தி வான்வெளிபாதுகாப்பு பொறிமுறை ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை எதிர்கொண்டது இந்த நடவடிக்கையில் எங்களின் மூலோபாய சகாக்களும் உதவி வழங்கினார்கள் எங்கள் எல்லைக்குள் வருவதற்குள் அனேகமானவற்றை செயல் இழக்கச்செய்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.