உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

17.04.2024 15:13:26

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதுடன் புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை விட ரஷ்ய வீரர்களின் இறப்பு 25% அதிகரித்துள்ளது.

இதேவேளை 2022 பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகி இருந்த நிலையில் தரவுகளின்படி, இரண்டாம் ஆண்டில் 27,300 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.