23 கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு

23.09.2021 06:16:00

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்தது.

கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 684,341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து, சா்வதேச அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 43,404,877 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 699,748 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 32,947,854 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 9,757,275 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.