வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!
செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை கராகஸ் நகரில் வானம் சிவப்பு-செம்மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டு வெனிசுலா மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
இது மக்களிடையே வியப்பையும், என்ன நடக்கிறது என்பது குறித்த பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியது.
தாழ்வான நிலையில் தென்பட்ட மேகங்கள் இந்தக்காட்சியை இன்னும் விசித்திரமாகவும் மர்மமாகவும் மாற்றின.
கராகஸ் நகரிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் பரவத் தொடங்கியதும், அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து சமூக ஊடகப் பயனர்கள் விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
சிலர் இதனை ஒரு கெட்ட சகுனமாக கருதினாலும், ஏனையவர்கள் இது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு என்பதை அறிந்துகொண்டனர்.
ஜூன் 24 அன்று வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலைியல் வானம் சிவப்பு நிறமாக மாறியது மேலும் வரவிருக்கும் பேரழிவின் அறிகுறி என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.