மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்து

23.04.2024 07:36:40

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

 

மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு விமானங்களு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லுமுட் சிறுநகரில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அருகே விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.