ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு ஜேர்மனி வலியுறுத்தல்!
|
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க ஈரானை ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான இராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், உலகப் பொருளாதாரத்தை காப்பாற்றவும் ஈரானுக்கு ஜேர்மனி முக்கிய வலியுறுத்தை முன்வைத்துள்ளது. அதாவது ஈரான் அணு ஆயுதக் கனவை கைவிட வேண்டும் என்றும், கடல்வழி வணிக போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேட்புல் வலியுறுத்தியுள்ளார். |
|
இது தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேட்புல், மத்திய கிழக்கு விவகாரம் மற்றும் பாதுகாப்பில் ஜேர்மனி அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் நேர்கோட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த விஷயத்தில் தூதரக ரீதியான தீர்வை அடைவதிலேயே ஜேர்மனி உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையும் அடிப்படை அளவுகோலாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவின் கோரிக்கையை வேட்புல் குறிப்பிட்டுள்ளார். |