900 ஆண்டுகள் பழமையான லெபனான் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!
|
லெபனானில் 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட்(Beaufort) கோட்டையை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்து வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தெற்கு லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட்(Beaufort) கோட்டையை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். |
|
பியூபோர்ட்(Beaufort) கோட்டையையும், அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளையும் தரைவழி தாக்குதல் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இஸ்ரேலிய படைகள் கோட்டையில் இஸ்ரேலிய நாட்டு தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். பியூபோர்ட்(Beaufort) கோட்டை மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரேலிய ராணுவத்தினர் வாதிடுகின்றனர். ஏனென்றால், கோட்டையில் இருந்து பார்த்தால் தெற்கு லெபனான் மற்றும் இஸ்ரேலின் வடக்கு பகுதியை துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்த உயரமான இடத்தை பயன்படுத்தி தான் லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது துல்லியமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். நேற்று ஹிஸ்புல்லா படையினர் வடமத்திய இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பியூபோர்ட்(Beaufort) கோட்டையை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பியூபோர்ட்(Beaufort) கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் கட்டுப்பாடு விரிவுப்படுத்தப்படும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். |