35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் மாயம்!

29.08.2026 13:17:00

நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர். நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 1,468 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 517 வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதுவரை 392 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்ததாவது, 667 பேர் காணாமல் போயுள்ளனர் என பதிவாகியுள்ளது. இதில் 127 நேபாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.

  

இந்தியா: வியாழன் நிலவரப்படி 178 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா: 90 பேர் காணாமல் போயுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா: 33 பேர் காணாமல் போயுள்ளனர்.

கனடா: 25 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால், கனடா அரசு 30 பேர் தொடர்பில் தகவல் இல்லை என தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா: 39 பேர் காணாமல் போயுள்ளனர்.

மலேசியா: 51 பேர் தொடர்பில் தகவல் இல்லை.

உக்ரைன்: 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனா: 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் காணாமல் போயுள்ளனர்.

மேலும், ஜேர்மனி (8), ரஷ்யா (8), சிங்கப்பூர் (9), தென் கொரியா (9), பிரான்ஸ் (4), ஸ்பெயின் (4), ஜப்பான் (5), நியூசிலாந்து (5), தென்னாப்பிரிக்கா (6), லாட்வியா (6), போர்ச்சுகல் (3), இத்தாலி (3), அயர்லாந்து (2), கசகஸ்தான் (2), இஸ்ரேல் (1), லிதுவேனியா (1), பிலிப்பைன்ஸ் (1), ஸ்வீடன் (1), பெல்ஜியம் (3), ஹங்கேரி (3),நெதர்லாந்து (2), பின்லாந்து (1) உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.

சுவிற்சர்லாந்து (1), பல்கேரியா (1) ஆகிய நாடுக்ளிக் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.

சிலர் மீட்கப்பட்டாலும், பலர் இன்னும் தொடர்பில் இல்லை. இரட்டை குடியுரிமை, உடல்களை அடையாளம் காணும் சிரமம், பேரழிவின் குழப்பம் ஆகிய காரணங்களால் எண்ணிக்கைகள் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரைத் தீவுச்சுற்றுலாக்களை முன்பதிவு செய்தல் இந்த பேரழிவு, நேபாளத்தின் சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் காணாமல் போனதால், பல நாடுகள் தங்கள் குடிமக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.