ஹோர்முஸ் ஜலசந்திக்கு வேறு பெயரிட்டுள்ள ட்ரம்ப்!

26.09.2026 15:24:17

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்திக்கு ட்ரம்ப் ஜலசந்தி என பெயரிட்டு வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என குறிப்பிட்டு, ஒன்ராறியோ ஏரியை அமெரிக்க ஏரி என குறிப்பிடும் வரைபடத்தை சமீபத்தில் ட்ரம்ப் பகிர்ந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், ஈரானுடனான மோதல் அதிகரித்துவரும் நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்திக்கும் வேறு பெயரிட்டு அது தொடர்பான வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்.

ஆம், தனது சமூக ஊடகப்பக்கத்தில், ஹோர்மூஸ் ஜலசந்தியை ட்ரம்ப் ஜலசந்தி என குறிப்பிட்டு வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். அது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டுவருகின்றன.